திண்டிவனம்
திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.
திண்டிவனம் அடுத்த மொளசூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 31 வது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஓட்டுநர்களுக்கு சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
மேலும் பொது மருத்துவ முகாம்,கண் சிகிச்சை முகாம் ஆகியவை நடத்தப்பட்டது.
முகாமிற்க்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் தலைமை தாங்கினார்.மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கவின்ராஜ்,கண்ணன் செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முருகவேல்,முருகன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒலக்கூர் வட்டார மருத்துவர் செந்தில் குமார்,தமிழ் பிரியா, ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொது மருத்துவ முகாமையும், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பெலம்பிதாஸ்,சுசத் பிரசாத் ஆகியோர் கொண்ட குழுவினர் சார்பில் கண் சிகிச்சை முகாமும் நடைபெற்றது. முகாமில் வட்டார போக்குவரத்து ஊழியர்கள், ஓட்டுநர்கள், திண்டிவனம் மற்றும் செஞ்சி அனைத்து ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் வட்டார போக்குவரத்து அலுவலக நேர்முக உதவியாளர் முருகன் நன்றி தெரிவித்தார்.